போதையில் பெற்றோரிடம் தகராறு செய்த அண்ணன்... ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற தம்பி!

 
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மதுபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்த அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். கூலி தொழிலாளியான இவருக்கு சூரியா (24), ஆனந்த் (21) என 2 மகன்கள் இருந்தனர். இதில் சூரியா பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ஊதாரித்தனமாக சுற்றி வந்துள்ளார். அவ்வப்போது மர வேலைக்கு செல்வாராம். ஒரு கட்டத்தில் மதுபோதைக்கு அடிமையான சூரியா, மதுகுடிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். 

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

மேலும் வாங்கிய கடனையும் அவரால் அடைக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட வெறுப்பை சூரியா, தன்னுடைய பெற்றோர், சகோதரி மீது காட்டி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே அண்ணனின் கடனை அடைக்கும்படி அவரது தம்பி ஆனந்திடமும் கேட்டு சிலர் நச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த பெற்றோர் மற்றும் சகோதரியிடம் மதுபோதையில் சூரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த சமயத்தில் ஆனந்த் அங்கு வந்தார். பெற்றோரிடம் தகராறு செய்த சூரியா மீது அவருக்கு ஆத்திரம் உருவானது. உடனே இதனை தட்டிக்கேட்டதால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து சூரியாவின் கழுத்தில் வெட்டினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சூரியா அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆத்திரத்தில் அண்ணனை வெட்டி கொன்று விட்டோமே என்ற அதிர்ச்சியில் ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கொலை

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தப்பி ஓடிய ஆனந்த்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். பெற்றோரிடம் தகராறு செய்த அண்ணனை, தம்பி வெட்டிக் கொன்ற சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web