மதுபோதையில் லாரி ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம், லைசென்ஸ் ரத்து!

 
லாரி குடிபோதை லாரி குடிபோதை

தூத்துக்குடி மாநகரில் மதுபோதையில் அஜாக்கிரதையாக லாரி ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்துப் போக்குவரத்துப் போலீசார் அபராதம் விதித்தனர். மேலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் அவர்களின் ஆலோசனையின்படி, நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்திப் போலீசார் சோதனையிட்டனர். லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மதுபோதையில் இருந்தது 'பிரீத் அனலைசர்' கருவி மூலம் உறுதி செய்யப்பட்டது.

 டாஸ்மாக்

மதுபோதையில் லாரி ஓட்டி வந்ததையடுத்து, உடனடியாக அந்த லாரியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிமீறல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் கோவிந்தனுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குப் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

பீர் டாஸ்மாக்

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எவ்விதத் தடையுமின்றி கடும் நடவடிக்கை தொடரும் எனத் தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.