பகீர் வீடியோ... மதுபோதையில் தாறுமாறாய் கார் ஓட்டி விபத்து... ஒருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே மதுபோதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட கார் தொடர் விபத்துகளில் சிக்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுபோதையில் அதிவேகமாக வந்த கார், முதலில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை அப்பகுதி பொதுமக்கள் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளனர்.

பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க முற்பட்டபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த வினோத் கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் பயணித்த மற்ற இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
