குடிபோதையில் நடுரோட்டில் ரகளை.. ரஷ்ய இளைஞரை கயிறு கட்டி சுற்றி வளைத்த போலீசார்!

 
ரஷ்ய இளைஞர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டு பகுதியில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கால் சட்டை மட்டும் அணிந்து, மேல் சட்டை அணியாமல், நடுரோட்டில் நின்று சத்தம் போட்டார். பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞரை தடுக்க முற்பட்ட போது, அவர் போலீசாரை தாக்க முயன்றார்.  அந்த நபரை கைது செய்ய வந்த வாகன ஓட்டிகளையும், பெண் காவலரையும் தாக்க முயன்றார்.

மேலும் அவரை அருகில் உள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி, அவரை ஏற்றிச் செல்ல முயன்றனர். பின்னர், ரஷ்ய இளைஞருடன் வந்த வெளிநாட்டினர் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களும் போதையில் கையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு வேறு வழியின்றி நடுரோட்டில்  ரகளை செய்து கொண்டிருந்த நபரை கயிற்றால் கட்டிப்போட்டனர்.

ரஷ்ய இளைஞர் குடிபோதையில் இப்படி செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் மருந்து உட்கொண்டனரா? என அண்ணாசாலை போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web