குடிபோதையில் அட்ராசிட்டி.. ஆத்திரத்தில் கணவனை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய மனைவி!

 
நந்தினி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (46). கல் உடைக்கும் தொழிலாளியான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ஏரியூர். இவரது மனைவி நந்தினி. இவர் காபி பவுடர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலை

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நாகராஜ் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நந்தினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது, ​​கணவரை கழுத்தை நெரித்து கொன்றதாக நந்தினி கூறினார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறு செய்ததால், ஆத்திரத்தில் நந்தினி கழுத்தை நெரித்துக் கணவரை கொன்றுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பிக்க தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதையடுத்து போலீசார் நந்தினியை கைது செய்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web