குடித்துவிட்டு டார்ச்சர் செய்த கணவர்கள்.. விரக்தியில் மனைவிகள் எடுத்த அதிரடி முடிவு!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலில், இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். கவிதா மற்றும் பப்லு இருவரும் சிவன் கோவிலுக்கு வந்து மாலைகளை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதைக் கண்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தத் திருமணம் குறித்து, குஞ்சா என்ற பப்லு என்ற பெண் கூறுகையில், “நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவிட்டோம். இறுதியில், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம், மணிக்கணக்கில் பேசினோம். எங்கள் குடும்பக் கதைகளைப் பற்றிப் பேசினோம். இதில், இரு கணவர்களும் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது.
இரண்டு பெண்களின் கணவர்களும் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை போட்டி வருகின்றனர். இதன் காரணமாக, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அதன்படி, இப்போது நாங்கள் மாலைகளை மாற்றிக் கொண்டு சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் கணவர்களின் தொல்லைகளிலிருந்து விலகி அமைதியான மற்றும் அன்பான வாழ்க்கையை வாழ முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார். நாங்கள் கோரக்பூரில் ஒரு ஜோடியாக வாழப் போகிறோம் என்றும் அவர் கூறினார்.
குஞ்சாவும், நாங்கள் இருவரும் வேலைக்குச் சென்று குடும்பத்தை வளர்க்க முடிவு செய்துள்ளோம் என்றும் கூறினார். திருமணம் குறித்து கோயில் பூசாரி உமா சங்கர் பாண்டே கூறுகையில், "இரண்டு பெண்களும் மாலைகளை வாங்கி திருமண சடங்குகளை செய்தனர். பின்னர், அவர்கள் நிம்மதியாக திருமணம் செய்து கொண்டு வெளியேறினர்." இந்த சம்பவத்தால் இரு பெண்களின் கணவர்களும் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!