தினமும் குடிபோதையில் டார்ச்சர்.. கணவனை உயிருடன் தீவைத்து எரித்து கொன்ற மனைவி!

 
லதா

வேலூர் அடுத்த இலவம்பாடியில் சுரேஷ் (30)- லதா (29) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கட்டிட தொழிலாளியான சுரேஷ் தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் தான் வீட்டுக்கு வருவாராம். அதோடு இல்லாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்குவது தொடர்கதையாகி வந்துள்ளது.

லதா

இந்த நிலையில், வழக்கம்போல் கடந்த 13ஆம் தேதி சுரேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லதா இதற்கு ஒரு முடிவுகட்ட திட்டம்போட்டார். இரவு 11 மணியளவில் கணவர் சுரேஷ் தூங்கி கொண்டிருந்தபோது, அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். 

இதில், உடல் முழுவதும் எரிந்த நிலையில் சுரேஷ் அலறி துடித்தார். மேலும் அவரது அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிதுநேரம் போராடி சுரேஷை மீட்ட கிராமத்தினர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் பலத்த தீக்காயம் அடைந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லதா

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து கணவனை கொன்ற லதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web