துபாயில் 24 காரட் தங்க நடைபாதை! இந்த ஆண்டுக்குள் திறக்கத் திட்டம்

 
துபாய்

 

தங்க நகைகளுக்கும் பிரம்மாண்டமான சுற்றுலா ஈர்ப்புகளுக்கும் பெயர் பெற்ற துபாய், தற்போது மற்றொரு வித்தியாசமான முயற்சிக்குத் தயாராகி வருகிறது. அங்குள்ள துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்டில், 24 காரட் தங்கத்தால் உருவாக்கப்படும் நடைபாதை இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது உலகின் முதல் மற்றும் மிக நீளமான தங்க நடைபாதையாக இருக்கும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

துபாயின் டெய்ரா பகுதியில் அமைந்துள்ள கோல்டு டிஸ்ட்ரிக்ட், தங்கம், ஆபரணங்கள் மற்றும் தங்க வர்த்தகத்துக்கான முக்கிய மையமாக விளங்குகிறது. இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த நடைபாதை உருவாக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் குறித்துப் பேசிய கோல்டு டிஸ்ட்ரிக்ட்டின் வணிகப் பிரிவு மூத்த இயக்குநர் ரஷித் அல் ஹர்மூதி, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடைபாதை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

Dubai announces world's first 24-carat gold walkway, set to open in 2026 | Trending

திறப்பு தேதி குறித்த எதிர்பார்ப்பு

நடைபாதையின் துல்லியமான நீளம், கட்டுமானச் செலவு மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே இத்தகவல்கள் தெளிவாகும்.தங்க வர்த்தகத்துடன் சுற்றுலாவையும் இணைக்கும் இந்த முயற்சி, துபாயின் புதிய சுற்றுலா அடையாளமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.