பூக்களுக்குப் பதிலாக தங்க நகைகளில் ரங்கோலி! துபாயில் 6.5 கிலோ தங்கத்தில் பிரம்மாண்ட கலைப்படைப்பு

 
ரங்கோலி

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துபாயில் 6.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 380 காரட்டுக்கும் அதிகமான வைரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ரங்கோலி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

துபாயில் உள்ள சிட்டி சென்டர் டெய்ரா (City Centre Deira) வணிக வளாகத்தில், டமாஸ் (Damas) நகை நிறுவனம் சார்பில் இந்த வித்தியாசமான ரங்கோலி அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வண்ணப் பொடிகள், அரிசி மாவு மற்றும் பூக்களைக் கொண்டு கோலமிடுவது வழக்கம். ஆனால், இங்கு தங்க நகைகளையே பயன்படுத்தி ரங்கோலி உருவாக்கியுள்ளனர்.

213 தங்க நகைகள்; 16 மணி நேர உழைப்பு!

Dubai Mall Unveils Golden Rangoli Crafted From 6.5 Kg of Fine Jewellery

சுமார் 2 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ரங்கோலியை உருவாக்க 213 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள் உள்ளிட்ட ஆடம்பர நகைகளுடன் 380 காரட்டுக்கும் அதிகமான வைரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

10 கைவினைக் கலைஞர்கள் தொடர்ந்து 16 மணி நேரம் உழைத்து இந்தப் பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியுள்ளனர். கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பாட்டியா இதனைத் திறந்து வைத்தார். இந்தத் தங்க ரங்கோலியைக் காண ஏராளமான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.