துபாய்.. சிங்கப்பூர் போல மாற போகுது இந்தியா... இனி டோல்கேட்ல வரிசையில் நிற்க தேவையில்லை!

 
துபாய் டோல்கேட்

டோல்கேட்களில் இனி மணி கணக்காக வாகனங்கள் வரிசை கட்டி நிற்காது. ஒவ்வொரு டோல்கேட்லேயுமே டிராஃபிக் ஜாம் ஆகி விடுகிறது. இதனால், சரியான நேரத்துக்கு செல்ல முடியாததுடன், பயண நேரம் அதிகரிப்பதுடன், அயர்ச்சியும் ஏற்படுகிறது. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில், டோல்கேட்களில் வாகனங்களை நிறுத்தி, கட்டணம் வசூலிப்பதில்லை. எந்த இடத்தில் டோல்கேட் துவங்குகிறதோ அந்த பகுதியில் சிசிடிவி கேமிரா, ஏஐ தொழில்நுட்பத்துடன் உங்கள் வாகனத்தின் க்யூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்து, உங்கள் வங்கி கணக்கில் இருந்து டோல்கேட் கட்டணத்தை கழித்துக் கொண்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்பும். நீங்கள் வழக்கமாக சென்று கொண்டிருக்கும் வேகத்திலேயே உங்கள் வாகனத்தை இயக்கலாம். வாகனங்களை அங்கே வழிமறிப்பதில்லை.

உதாரணத்திற்கு முதல் படத்தைப் பாருங்க... இந்த இடத்திலிருந்து டோல்கேட் துவங்குகிறது என்று மேலே இருக்கும் அறிவிப்பு பலகை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிப்பதற்காக. அந்த கோட்டைத் தாண்டும் வாகனங்களின் எண்களை ஏஐ சிசிடிவி கேமிரா ஸ்கேன் செய்ய துவங்கிவிடும்.

பாஸ்ட் டேக்

அதே சமயம், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக சுங்க சாவடிகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டணம் ஒவ்வொரு முறையும் உயர்த்தப்படுவது மக்கள் மத்தியில் பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி சுங்க சாவடி கட்டணத்தில் புதிய முறை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சுங்க கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுகிறது என்ற புகார்கள் வருகின்றன.ஆனால் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்துக்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்பது வெகுவாக குறைந்துள்ளது, குறிப்பாக முன்பு மும்பையில் இருந்து பூனே செல்வதற்கு 9 மணி நேரம் ஆன நிலையில் நெடுஞ்சாலைகளை அமைத்ததன் மூலம் தற்போது 2 மணி நேரம் தான் ஆகிறது என தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் சுங்க கட்டண முறையை நீக்கி புதிய அமைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.
ஃபாஸ்ட் டேக்
புதிய நடைமுறை ஜிபிஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு சுங்க கட்டண முறையாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையில் என்றால் சுங்க கட்டணங்களை வசூலிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது இனி வாகனம் ஓட்டுபவர்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய தேவை இருக்காது. அவர்களது கணக்கிலிருந்து ஜிபிஎஸ் தொழில்நுட்ப மூலம் தானாக சுங்க கட்டணமானது கழிக்கப்படும். வாகனத்தில் உள்ள ஜிபிஎஸ்-ஐ கொண்டு வாகனம் செல்லும் தூரம் ஆகியவை கணக்கிடப்படும், இதனை அடுத்து அந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் வங்கி கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை கழித்துக் கொள்ளும. ஜிபிஎஸ் முறை நடைமுறைக்கு வருவதற்கு அனைத்து வாகனங்களிலும் புதிய நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும். மேலும் இது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக தானாகவே நம்பர் பிளேட்டுகளை படிக்கக்கூடிய கேமராக்கள் ஆங்காங்கே நெடுஞ்சாலைகளில் பொருத்தப்படும். இதன் மூலம் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புதிய தொழில்நுட்ப முறையில் சுங்க கட்டணமானது வசூலிக்கப்படும்.நாடு முழுவதும் சுமார் 1000 சுங்க சாவடிகள் தற்போது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web