"Ducatiயின் அதிரடி - இந்தியாவில் அறிமுகமானது 'Desmo450 MX' - ரூ.17.24 லட்சம் விலையில் சொகுசு மோட்டோகிராஸ் பைக் விற்பனை தொடக்கம்!

 
Ducati டூகாட்டி பைக் ரேஸ் Ducati டூகாட்டி பைக் ரேஸ்

உலகப்புகழ் பெற்ற இத்தாலிய பைக் நிறுவனமான டுகாட்டி, தனது முதல் மோட்டோகிராஸ் (Motocross) மாடலான 'Desmo450 MX' பைக்கை இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக் குறிப்பாக கரடுமுரடான பாதைகளில் பந்தயங்களில் ஈடுபடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் 449.6 சிசி (cc) கொண்ட சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. நவீன 'டெஸ்மோட்ரோமிக்' வால்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது, இது பந்தயக் களங்களில் அதிக செயல்திறனை வழங்கும். இந்த பைக்கின் மொத்த எடையே வெறும் 104.8 கிலோ தான். இதன் குறைந்த எடை காரணமாக, மிகக் குறுகிய வளைவுகளிலும் எளிதாகக் கையாள முடியும்.

இந்தியாவில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.24 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரத்யேக பந்தய வகை பைக் என்பதால், முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் உள்ள டுகாட்டி ஷோரூம்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

சாதாரணச் சாலைகளில் பயன்படுத்துவதை விட, ஆஃப்-ரோடு பந்தயங்களில் பங்கேற்பவர்கள் மற்றும் சாகசப் பயணங்களை விரும்புபவர்களை இலக்காகக் கொண்டே இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி நிறுவனம் மோட்டோகிராஸ் பிரிவில் தடம் பதிப்பது இதுவே முதல்முறை என்பதால் சர்வதேச அளவில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.