"நிதி நெருக்கடியால் தான் 6 சிலிண்டர்களுக்குப் பதில் 3 சிலிண்டர்கள்" - மதுராந்தகம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் விளக்கம்!

 
விஜய் பிரச்சாரம் இடைத்தேர்தல் தேர்தல்

மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், மாநிலத்தில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாகவே இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், அரசின் நிதி நிலைமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவே, ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 6 சிலிண்டர்களுக்குப் பதிலாக 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கும் சூழல் தற்காலிகமாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விஜய் பிரச்சாரம்

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்த முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் புத்திசாலித்தனமான தமிழ்நாட்டு மக்கள் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு, "எங்கள் விஜய் பொறுமையாகச் செய்து கொடுப்பார்" என்று எதிர்க்கட்சிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

மக்கள் தன் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையிலான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், மக்களின் இன்னல்களைத் தீர்க்கத் தமது அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.