ரூ2000 கோடி ... தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் ஜவுளி தொழிலாளர்கள் அவதி...!!

 
 ஜவுளி உற்பத்தி தொழில்

ஜவுளி உற்பத்தி வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

திருப்பூர் மற்றும் கோவையில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு,குரு, தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராஜபாளையத்தில் தினமும்  ரூ.10 லட்சம் வரை உற்பத்தி பாதிப்பு | powerloom workers demanding wage hike  - hindutamil.in

அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த 16 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஜவுளி தொழிலாளர்கள் கூறியதாவது, உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் கடந்த நவ.5 முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த 16 நாட்களாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Loom Workers Struggle: Production Impact of Rs | விசைத்தறி தொழிலாளர்கள்  போராட்டம்: ரூ.75 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு

மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இருந்த போதிலும் ஜவுளி தொழிலுக்கு சாதகமான அறிவிப்புகள் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். மின் மிகை பயன்பாடு கட்டணம் ரத்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஐவுளி தொழிலை காப்பாற்ற முடியும். மத்திய அரசு நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

From around the web