இன்று இரவே தமிழக வீராங்கனைகள் டெல்லி அழைத்து வரப்படுவார்கள்... துணைமுதல்வர் அதிரடி!

2024 - 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே குறித்து தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வாக்குவாதத்தில் நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக கபடி வீராங்கனைகள் தாக்குதல் சம்பவம் குறித்து தமிழகத்தின் விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் “ தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். தமிழக கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பஞ்சாப் அரசு அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கு புள்ளிகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இன்று இரவே தமிழக வீராங்கனைகள் பஞ்சாப்பில் இருந்து டெல்லி அழைத்துவரப்படுவார்கள். வெளி மாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!