அக்.19ல் துர்காஷ்டமி... பொது விடுமுறை அறிவித்தது கேரளா அரசு!

 
துர்காஷ்டமி விடுமுறை

நவராத்திரி விழாவின் முக்கிய நாளான துர்காஷ்டமியை முன்னிட்டு, வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கேரளா மாநிலம் முழுவதும் பொது விடுமுறை வழங்கி அம்மாநில அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கேரள மாநில ஆளுநரின் ஒப்புதலின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, அக்டோபர் 19 அன்று மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

#BREAKING: சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இந்த விடுமுறை அறிவிப்பால் கேரள மாநில மக்களுக்குத் தொடர்ச்சியாக அக்டோபர் 19 (திங்கள்): துர்காஷ்டமி பொது விடுமுறை, அக்டோபர் 20 (செவ்வாய்): ஆயுத பூஜை பண்டிகை விடுமுறை, அக்டோபர் 21 (புதன்): விஜயதசமி பண்டிகை விடுமுறை என தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. 

முன்னதாக வரும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து மொத்தம் ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைப்பதால், அம்மாநில அரசு ஊழியர்கள், மாணவச் செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

துர்காஷ்டமி

கேரளாவில் நவராத்திரி திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். குறிப்பாக துர்காஷ்டமி நாளன்று குழந்தைகள் தங்களது புத்தகங்களையும், கலைஞர்கள் தங்களது கருவிகளையும் பூஜையில் வைக்கும் 'பூஜை வைப்பு' நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு முதன்முதலில் எழுத்துப் பயிற்சி தொடங்கும் 'வித்யாரம்பம்' நிகழ்வு மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பாக நடைபெறும். இந்தத் தொடர் விடுமுறை காரணமாகப் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும் ஆன்மீகத் தலங்களுக்கும் தடையின்றிச் சென்று வரச் சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.