தேர்தல் பிரச்சாரத்தின் போது விபரீதம்.. கீழே விழுந்து எலும்பு முறிவு.. ஊன்றுகோலோடு களத்தில் கலக்கும் தமிழச்சி!

 
தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், தேர்தல் பணிமனைகளும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தெற்கு தெற்கு திமுக வேட்பாளர் பணிமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் 3 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் மீறி தேர்தல் பிரசாரத்துக்காக களம் இறங்கியுள்ளார். தனித்து நடக்க முடியாததால் ஊன்றுகோல் வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போது, கரும்புகையில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் தென்மேற்கு மாவட்டம் மயிலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலை கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டாவது நாளாக இன்று பிரச்சாரம் செய்தார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று, வேட்பாளர் பணிமனை கட்டடத்தை திறக்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்து, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று வாரங்கள் ஓய்வெடுக்கச் சொன்னதாகவும், ஆனால் தேர்தல் நேரம் என்பதால் ஓய்வு எடுக்காமல் பிரசாரப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web