ரேஷன்கடைகளில் செப்டம்பர் 5 வரை துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலாம்!

 
ரேஷன்

 தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் இவைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய ரேஷன் பொருட்களை செப்டம்பர் 5ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்  என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை  அறிவித்துள்ளது.

ரேஷன்
இது குறித்து  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் 5 ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும். 

ரேஷன்

அனைத்து ரேஷன் கடைகளிலும்  ஆகஸ்ட் 2024 ம் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை  செப்டம்பர் 2024, மாதம் 5 ம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

From around the web