"ஒரு பக்க மீசையை எடுக்கிறேன்" - திமுகவுக்கு நேரடி சவால் விட்ட தவெக MLA வி.எஸ்.பாபு!

 
கொளத்தூர் பாபு

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திமுக நிர்வாகிகளுக்குக் கடுமையான அரசியல் சவாலை முன்வைத்துள்ளார்.

"திமுகவில் அவர்கள் குடும்பத்தினரும், குறிப்பிட்ட சில தலைவர்களும் மட்டுமே கடைசி வரை பதவிகளில் நீடிப்பார்கள்; சாதாரண தொண்டர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது" எனக் கடுமையாகச் சாடினார்.

"திமுகவின் முன்னாள் அமைச்சர்களில் யாராவது ஒரே ஒருவராவது மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால், எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்" என மேடையில் பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.

முன்னாள் திமுக அமைச்சர்கள் இனி வரும் தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்றுச் சட்டப்பேரவைக்கு வரவே முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தவெகவின் 100 நாள் சாதனைக் கூட்டங்களில் அக்கட்சி நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக காரசாரமான கருத்துகளைத் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.