கோட்டை கருப்பணசாமி கோயிலில் விடிய விடிய கறி விருந்து - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா!

 
கோட்டை கருப்பண்னசாமி திண்டுக்கல் கறிவிருந்து

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தருமத்துப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி பக்தர்களுக்கு விடிய விடிய கறிவிருந்து வைத்து விமரிசையாக நடைபெற்றுள்ளது. கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

கறிவிருந்து

பலியிடப்பட்ட ஆடுகளின் கறியைக் கொண்டு அங்கேயே பிரம்மாண்ட அண்டாக்களில் பாரம்பரிய முறைப்படி சுடச்சுட கறிக்குழம்பு மற்றும் சாதம் சமைக்கப்பட்டது. இந்தச் சமையல் பணியும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்து பரிமாறலும் விடிய விடிய நடைபெற்றது. இத்ததிருவிழாவின் மிக முக்கியத் தனித்துவமான கட்டுப்பாடு என்னவென்றால், இதில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கறிவிருந்து

சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து, இந்த அசைவப் பிரசாத உணவை உற்றார் உறவினர்களுடன் இணைந்துண்டு மகிழ்ந்தனர். பல நூற்றாண்டுகளாகத் தங்களது கலாச்சாரம் மாறாமல் நடத்தப்படும் இத்திருவிழா அப்பகுதியில் பெரும் ஆன்மீக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.