விடிய விடிய மழை... மேம்பாலத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்த குப்பை லாரி... 3 பேர் படுகாயம்!

 
தலைக்குப்புற கவிழ்ந்த லாரி விபத்து

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் குப்பை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த லாரி மேம்பாலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.

விபத்து

சென்னையில் காலை முதலே பெய்து வந்த லேசான மழை காரணமாக சாலையில் வழுக்கல் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை. விபத்துக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.