ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் - பீதியில் பொதுமக்கள்!
Oct 11, 2026, 18:10 IST
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குப் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.41 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவானது. இது தரைமட்டத்திலிருந்து சுமார் 181 கிலோமீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு நிகழ்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மதியம் 12.34 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொடர் நில அதிர்வுகளால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பொருள்சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
