வங்கக்கடலில் நிலநடுக்கம்.. ரிக்டர் 4.5 ஆக பதிவு!
வங்கக்கடலில் நேற்று இரவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதிகளில் பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ எதுவும் ஏற்படவில்லை. நேற்று இரவு 10:52 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது.
அந்தமான் தீவுக் கூட்டத்தில் உள்ள திக்லிபூர் பகுதிக்கு வடக்கே சுமார் 121 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கணக்கிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம், இது மிக லேசான நிலநடுக்கம் என்பதால் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி ஆபத்தோ அல்லது பேரலைக்கான எச்சரிக்கையோ எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும், கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகளைக் கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
