அதிகாலையிலேயே குலுங்கியது வீடுகள்... ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

 
ஜம்மு காஷ்மீர்

 ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், வீடுகள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியில் பதறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக சாலைகளில் தஞ்சமடைந்தனர். 

இந்த நிலநடுக்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.6 மற்றும் 4.8 ஆக பதிவாகி இருந்த நிலையில், நிலநடுக்கத்தினால் வீடுகள் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

இன்று அதிகாலை 6.45 மணியளவில் மக்கள் பலரும் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த நிலையில், நிலநடுக்கத்தால் பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!