திருவாரூரில் நிலஅதிர்வு? குலுங்கிய வீடுகள்... வீதிக்கு ஓடி வந்த பொதுமக்கள்!

 
நில அதிர்வு

 உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.அந்த வகையில் கடந்த சில மாதங்களாக நில அதிர்வானது இந்தியாவிலேயே பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது.  டெல்லியை சுற்றி  வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள்  அச்சத்தை ஏற்படுத்தியது.   கடந்த சில நாட்களுக்கு முன்  திருப்பதி, சென்னையின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  தற்போது திருவாரூரில் நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவலால்  பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

நில அதிர்வு
திருவாரூரில் இன்று காலை 11 மணிக்கு பயங்கர சத்தத்தோடு வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனையடுத்து  வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்பவர்கள்  அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  இந்த பயங்கர சத்தம் திருவாரூர் மட்டுமல்லாமல் கொரடாச்சேரி, கண்கொடுத்தவணிதம், பூந்தோட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உட்பட  பல்வேறு மாவட்டங்களில்   பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் அருகே உள்ள மாவட்டங்களான காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்திலும்  வெடி சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 

ஜெட் விமானம்


இதன் காரணமாக  திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒருவித பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது குறித்து  மாவட்ட நிர்வாகம் ”பொதுமக்கள் பயப்படும் வகையில்  நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை.  தஞ்சாவூர் - கோடியக்கரை வான்வெளியில் சென்ற ஜெட் விமானம் பயிற்சி மேற்கொண்டதால் அதிக சத்தம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. “ இதன் பிறகு  மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web