திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு!
Sep 11, 2026, 08:55 IST
சீனாவின் திபெத் சுயேச்சைப் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சரியாக 4.02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது பூமியின் புவிப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.மீ. ஆழத்தில், 28.365 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 87.594 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் உருவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருந்ததால், உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.
