நள்ளிரவில் அதிர வைத்த நிலநடுக்கம்... திபெத்தில் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு!

 
நிலநடுக்கம் நிலநடுக்கம்

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 3:10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் திடீர் நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

இந்த நிலநடுக்கமானது திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திபெத் மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகள் புவித்தட்டுகள் மோதிக் கொள்ளும் முக்கியப் பிளவுப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களோடு ஒப்பிடுகையில் இது மிதமான அளவில் இருந்தாலும், ஆழமற்ற நிலநடுக்கம் என்பதால் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நிலமை குறித்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். திபெத்தின் இமயமலைப் பகுதிகளில் நில அதிர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.