இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கில் நிலநடுக்கம்...!
Aug 24, 2026, 10:29 IST
இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் இன்று அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் 8 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, லடாக்கின் லே பகுதியில் காலை 8.25 மணியளவில் 120 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.5 ஆக மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
