கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

 
கிவி

தினம் ஒரு பழம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் எந்த வகையான பழங்கள் என்பதிலே பெரும் சவால் நிறைந்துள்ளது. சிட்ரஸ் வகை பழங்களாக அமைந்துவிட்டால் மிகவும் நல்லது என்கின்றனர். அதில் கிவி  பழத்தில் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது.  கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம் உட்பட பல்வகையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.  கிவி பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் வளமான அளவில் நிறைந்துள்ளது.  

உடல் எடை

வயிறு செரிமானம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு அவசியமானதே.. ஒருவர் கிவி பழத்தை ஒருவர் சாப்பிட்டால், அது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். அதே சமயம் பகல் பொழுதில் புத்துணர்ச்சியும் கொடுக்கும்.    கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.  குடல் புற்றுநோய், இதய நோய், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைத்து   இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும்   வாரம் ஒரு  கிவி பழம் சாப்பிடுவதால்  ஆஸ்துமா, சைனஸ் போன்ற  சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும்.  

இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவும்.   முதுமை காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். எனவே கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க, கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிடலாம்.  கிவிப் பழத்தில் உள்ள செரடோனின் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுப்பதோடு, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவி புரியும்.  கிவி பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள், முறையான குடலியக்கத்தைப் பராமரிக்க உதவும். ஒருவர் தினமும் கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால், மல உற்பத்தி மற்றும் அதை வெளியேற்றுவதில் உள்ள பிரச்சனை நீங்கும் .கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.   

கிவி


கிவி பழத்தை ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களைக் குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைக் குறைத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.  கிவி பழத்தை சாப்பிட்டால், இயற்கையாகவே இரத்தம் உறைவதைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கிவி அருமருந்து. கிவி  மற்ற பழங்களைப் போல் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்காது. மேலும் இதில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.  

From around the web