இந்த உணவுகளை சாப்பிட்டா சுகர் குறையலாம்!!

 
காலை வெறும் வயிற்றில் இதையெல்லாம் செய்தா நீரிழிவு நோயே வராதாம்!!!

நீரிழிவு நோய் என்பது அசாதாரணமான உயர் ரத்த குளுக்கோஸ் அளவுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. ஆரோக்கியமான நபர்களில், இன்சுலின் என்ற ஹார்மோன் உடலின் செல்களுக்கு குளுக்கோஸை வழங்க உதவுகிறது. அவர்களுக்கு அத்தியாவசிய ஆற்றலை வழங்குகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின், உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி  இருக்காது. உயர் ரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும்.அதே நேரத்தில் நீரழிவு நோய் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கக்கூடிய நபர்கள் அது ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவக்கூடிய ஒரு சில உணவுகளை ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரை செய்கிறது. இந்த உணவுகள் நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க நினைக்கும் நபர்களுக்கும் உதவக்கூடும். அவை என்ன உணவுகள் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

நெல்லிக்காய்


கிலாய் மூலிகையைப் போலவே நாவல் பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஆயுர்வேதத்தில் நாவல் பழ விதைகளின் பொடி மற்றும் பழம் ஆகிய இரண்டுமே நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. நாவல் பழத்தில் காணப்படும் ஹைப்போகிளைசிமிக் விளைவு காரணமாக இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நாவல் பழத்தில் காணப்படும் எலாஜிக் அமிலம் மற்றும் பாலிபினால்கள் போன்றவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, நீரழிவு நோயால் ஏற்படக்கூடிய ஒரு சில விளைவுகளை தடுக்க உதவுகிறது.    
வைட்டமின் சி ஏராளமாக கொண்டுள்ள நெல்லிக்காய் ஒரு சக்தி வாய்ந்த ஆயுர்வேத மூலிகையாக கருதப்படுகிறது. நெல்லிக்காய் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிக அளவில் காணப்படுவதால் இது கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பெரும்பாலான நீரழிவு நோயாளிகளில் காணப்படும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கத்தை குறைக்கக்கூடிய பண்புகள் நெல்லிக்காயில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பாகற்காய்


நீரழிவு நோயாளிகள் பெரும்பாலும் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள். இந்த காய்கறியை சாப்பிடலாமா, இதை தவிர்க்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்றவர்களுக்கு பாகற்காய் ஒரு அற்புதமான காய்கறியாக திகழ்கிறது. பாகற்காயில் உள்ள ஆன்டி டயாபட்டிக் பண்புகள் காரணமாக இது நீண்ட காலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் மருத்துவத்திலும் பாகற்காயில் உள்ள பாலிபெப்டைட்-பி என்ற சேர்மம் ரத்தசர்க்கை அளவுகளை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. குளுக்கோஸை சரியான முறையில் பயன்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டவும் பாகற்காய் உதவுகிறது. பாகற்காயை சாறாகவோ அல்லது அதன் விதைகளை பொடியாக செய்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். 

From around the web