அரசு மருத்துவமனையில் எபோலா வார்டு... தீவிரமாக பரவும் வைரஸை எதிர்கொள்ள அதிரடி ஏற்பாடு!

 
எபேலோ எபேலோ

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  கிபி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எபோலா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்கான பிரத்யேக வார்டு அவசரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருத்துவமனை நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 அரசு மருத்துவமனையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த எபோலா சிறப்புச் சிகிச்சை வார்டில் மொத்தம் 10 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளைக் கண்காணிக்கவும், அவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளை தங்கு தடையின்றி வழங்கவும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுக்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வார்டுக்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் மூலம் மிக எளிதாக மற்றவர்களுக்குப் பரவக்கூடிய தன்மை கொண்டது. இதனால், இந்தத் தனி வார்டில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேக பாதுகாப்பு உடைகள் மற்றும் கிருமிநாசினிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு   யாருக்கும் இந்த பாதிப்பு இல்லை என்றாலும், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக இந்த 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்து அலர்ட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.