இந்தியாவில் எபோலா பாதிப்பு இல்லை... ஒன்றிய சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

 
ebola ebola

இந்தியாவில் எபோலா நோய் பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த நோய் குறித்த அச்சம் நிலவி வரும் வேளையில், இந்திய மக்கள் யாரும் இது குறித்துப் பயப்படத் தேவையில்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், பொதுமக்கள் இந்த நோய் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எபேலோ

இந்த வைரஸ் தொற்று குறித்த சந்தேகங்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு 1075 என்ற பிரத்யேக உதவி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணின் மூலம் 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெற உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக இந்த எண்ணிற்கு அழைத்துத் தகவல் தெரிவிப்பது நோயைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எபேலோ

எபோலா வைரஸ் தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தெரிவிப்பது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் என ஒன்றிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே இதனைக் கண்டறிவதன் மூலம் நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் எளிதாகத் தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறும், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.