காங்கோவில் எபோலா பலி எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியது... பீதியில் மக்கள்!

 
ebola

 

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. உலகிலேயே மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, காங்கோவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,186 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இக்கொடிய வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,007 ஐத் தாண்டியுள்ளது. நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகள் காங்கோவிற்குத் தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.