காற்று மாசுபாடு எதிரொலி.. நேரடி வகுப்புக்கு மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 
டெல்லி மாசு காற்று வாகனம் பனி

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்கள் விவசாயம் செழிப்பாக உள்ளன. விவசாய ஆண்டின் இறுதியில், புதிய பயிர்களுக்குத் தயாரிப்பதற்காக பயிர் எச்சங்கள் எரிக்கப்படுகின்றன. இந்த கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றின் தரக் குறியீடு (AQI) 100ஐத் தாண்டினால், அது சுவாசத்திற்கு ஏற்றதல்ல. ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியுள்ளது.டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன.

காற்று மாசுபாடு

இதில், 32 மையங்களில், 400க்கு மேல் காற்று மாசு குறியீடு பதிவாகி உள்ளது.மூடுபனி போன்ற காற்று மாசுபாடு இருப்பதால், சாலை போக்குவரத்து மட்டுமின்றி, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் மாணவர்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை பலனளிக்கவில்லை.

நீதிமன்றம்

இதை தானாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், டெல்லியில் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், ஆன்லைனில் பாடம் நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகளில் நேரில் வகுப்புகள் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் ஆன்லைன் மூலம் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web