ஆயுத பூஜை எதிரொலி.. பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!

 
பூக்கள்

ஆயுத பூஜை மற்றும் தொடர் பண்டிகைகளைக் முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட முக்கியப் பூ சந்தைகளில் பூக்களின் விலை பலமடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்கள்

தொடர் பண்டிகை மற்றும் வழிபாடுகள் காரணமாகச் சந்தைகளில் பூக்களுக்கான தேவை திடீரெனப் பெருமளவு உயர்ந்துள்ளதால் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் வரை ஒரு கிலோ ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உயர்தரப் பிச்சிப்பூ, தற்போது கடுமையான தட்டுப்பாடு மற்றும் உச்சபட்ச தேவை காரணமாக ஆறடங்கு அதிகரித்து மூவாயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. 

பூக்கள் மாலை ஆயுதபூஜை

பண்டிகைக் காலத்தில் வழிபாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமான பூக்களின் விலை இவ்வளவு அதிகமான அளவுக்கு எகிறியுள்ளதால், பொதுமக்களும் சில்லறை வியாபாரிகளும் பெரும் கவலை மற்றும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.