முரசு புயல் எதிரொலி... சென்னை மாநகராட்சி சார்பில் 14,800 பேருக்கு உணவு!

 
சாப்பாடு உணவு மாநகராட்சி புயல்

வடகிழக்குப் பருவமழை மற்றும் 'முரசு' புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட 14,800 பேருக்குக் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டுள்ளது.

மழைநீரை அகற்றுதல் மற்றும் மீட்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் உணவு வழங்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புயல்

மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்குத் தடையின்றி உணவு சமைத்து வழங்குவதற்காக மொத்தம் 112 சமையற்கூடங்கள் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாத மழையின்போது 57,100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி எம்.கே.பி.நகர் அரசுப் பள்ளி, மூர்த்திங்கர் தெரு சென்னை நடுநிலைப்பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.ஜெ.நகர் வார்டு அலுவலகம் மற்றும் ராயபுரம் அம்மா உணவகம் ஆகிய 4 மையங்களில் காலை உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

மழை கனமழை புயல்

அடையாறு மண்டலம், வேளச்சேரி காந்தி சாலை சேவா நகர் சமுதாயக் கூட மையத்திலிருந்து 1,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி சி கல்யாணபுரம் சென்னை உயர்நிலைப் பள்ளி மையத்திலிருந்து 1,000 பேருக்கு இரவு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மழை பாதிப்பு குறையும் வரை நிவாரண முகாம்கள் மற்றும் சமையற்கூடங்கள் தொடர்ந்து இயங்கும் எனத் தமிழக அரசு தெரிவிடைத்துள்ளது.