வெயில் தாக்கம் எதிரொலி.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை கிடுகிடு உயர்வு!
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து அமோகமாக நடைபெற்று வருகிறது.

பொதுவாக கோடை காலம் (ஏப்ரல் - ஜூன்) முடிந்த பிறகு பீர் விற்பனை குறைவது வழக்கம். செப்டம்பர் மாதத்தில் சராசரியாக 30 முதல் 32 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பரில் வெயில் வாட்டி வதைத்த காரணத்தினால் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 37.20 லட்சம் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, செப்டம்பர் மாதத்தில் 38.80 லட்சம் பெட்டிகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு (2025) செப்டம்பரில் 32.99 லட்சம் பெட்டிகளே விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
