போர் எதிரொலி... சிமென்ட், கம்பி விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுபவர்களுக்கு அடுத்த ஷாக்!

 
கட்டுமானம் சிமென்ட் கம்பி பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் கட்டுமானம் சிமென்ட் கம்பி பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன்

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் காரணமாக, கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, இன்று முதல் புதிய விலைப் பட்டியல் அமலுக்கு வந்துள்ளது.

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிமென்ட் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. போர் காரணமாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால்: ஒரு மூட்டை சிமென்ட் விலையில் ரூ.50 முதல் ரூ.70 வரை உயர்ந்துள்ளது.

ஜல்லி கட்டுமானம் பில்டிங் கட்டிடம்

ஏற்கனவே சிமென்ட் விலை அதிகமாக இருந்த நிலையில், இந்தத் திடீர் உயர்வு நடுத்தர வர்க்கத்தினரின் வீடு கட்டும் கனவுக்குச் சவாலாக மாறியுள்ளது. உலோக உற்பத்திக்கான எரிபொருள் செலவு மற்றும் மின்சாரக் கட்டண உயர்வைக் காரணமாகக் காட்டி, கம்பி தயாரிப்பு நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன. ஒரு டன் கட்டுமானக் கம்பிக்கு ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

போர் எதிரொலியால் சர்வதேச அளவில் நிலக்கரி மற்றும் பிற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் எனத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமானம்

இந்தத் திடீர் விலை உயர்வால், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட பல கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "சிமென்ட் மற்றும் கம்பி விலை ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளதால், ஒரு சதுர அடி கட்டுமானச் செலவு கணிசமாக அதிகரிக்கும்" எனப் பொறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.