மரணம் குறித்து பிரசங்கம் … சில நிமிடங்களில் சிலுவை தலையில் விழுந்து பாதிரியார் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
ஈக்வெடார்

 

 மரணத்தின் நிலையற்ற தன்மை குறித்து தேவாலயத்தில் பிரசங்கம் செய்த பாதிரியார், சில நிமிடங்களிலேயே சிலுவை விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குவாயாகில் நகரில் உள்ள தேவாலயத்தில், பாதிரியார் பேட்ரிசியோ ஆல்ஃபிரெடோ சான்செஸ் மோலினாரி (Patricio Alfredo Sánchez Molinari) கடந்த 17-ம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்துப் பேசிய அவர், செல்போனில் நேரத்தைச் செலவிடுவதைவிட இறைவன் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது முக்கியம் எனக் கூறினார்.

அதன்பிறகு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய சிலுவை திடீரென கழன்று விழுந்து அவரது தலையில் மோதியது. இந்தச் சம்பவம் நேரடி ஒளிபரப்பில் பதிவானது. பாதிரியாரின் மரணத்தை குவாயாகில் மறைமாவட்டம் உறுதிப்படுத்தியது. சிலுவை ஏன் விழுந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.