"மக்கள் தொகைக்கேற்ப காவல்துறையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 
எடப்பாடிவிஜய் எடப்பாடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் காவலர்களின் பலத்தை உயர்த்த வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டதாகவும், பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காவலர்களுக்கு உரிய பதவி உயர்வுகளும் நியமனங்களும் முறையாக வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எடப்பாடி இபிஎஸ்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் காவலர்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

காவல் துறையில் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே அந்தப் பணியிடத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி, காலியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.