நாளை பிரச்சாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி - முழு பயண அட்டவணை வெளியீடு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை முதற்கட்டமாகச் சூறாவளிப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், அதிமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இந்தப் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரச்சாரப் பயண அட்டவணை (மார்ச் 25 - ஏப்ரல் 01):
25.03.2026 பிற்பகல் 3:30 மணி மயிலாப்பூர்
27.03.2026 மாலை 4:00 ஆலந்தூர் / மாலை 6:00 மணி தாம்பரம்
28.03.2026 மாலை 4:00 ஆர்.கே. நகர் / மாலை 6:00 மணி திருவொற்றியூர்
29.03.2026 மாலை 4:00 நாகர்கோவில் / மாலை 5:30 மணி ராதாபுரம்
30.03.2026 மாலை 4:00 கடையநல்லூர் / மாலை 6:00 கோவில்பட்டி
31.03.2026 மாலை 4:00 சிவகாசி / மாலை 6:00 மணி பரமக்குடி
01.04.2026 மாலை 4:00 சிவகங்கை / மாலை 6:00 மணி புதுக்கோட்டை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, மார்ச் 29 முதல் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் திட்டங்களை முன்வைத்து அவர் மக்களிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
