தவெக அரசு 100 நாட்களில் ரூ.28,000 கோடி கடன்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 
எடப்பாடி

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றக் குறுகிய காலத்திற்குள் பெரிய அளவில் கடன் வாங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தவெக அரசு ஆட்சிக்கு வந்த முதல் சில மாதங்களிலேயே ரூ.28,000 கோடி வரை கடன் வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடிவிஜய் எடப்பாடி

நடப்பு நிதியாண்டில் மட்டும் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்து இறுதியில் பொதுமக்களின் தலையிலேயே மிகப்பெரிய நிதிச்சுமை விழும் என்றும் அவர் எச்சரித்தார்.

தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் நிதி மேலாண்மை விவகாரங்களில் ஆளுங்கட்சி முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் தனது உரையில் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.