அதிமுகவில் இணைந்த எடப்பாடி தவெக வேட்பாளர் அருண்குமார்!

 
எடப்பாடி தவெக வேட்பாளர் அருண்குமார்

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் வேட்பாளர் அருண்குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

எடப்பாடி தொகுதியின் தவெக வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட அருண்குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.

எடப்பாடி தவெக

சட்டமன்றத் தேர்தலின் போது வேட்புமனுவில் போதிய ஆதரவாளர்களின் கையொப்பம் பெறாமல் வேண்டுமென்றே குளறுபடி செய்து, மனு நிராகரிக்கப்பட அருண்குமார் வழிவகுத்ததாகப் புகார்கள் எழுந்தன.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகச் செயல்பட்டு அதிமுகவின் நாடகச் சூழ்ச்சியை நிறைவேற்றிய பின்னரே, அருண்குமார் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளார் என்று சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.