மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி... தமிழக அரசு திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் ரூ.48.95 கோடி கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
“மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகை இருந்து வருகிறது.
இந்த தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாத காரணத்தால் வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும்விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காணவும் முடியவில்லை. இதனையடுத்து ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!