கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பாணியில் ‘ஈ ஜனதா கட்சி’! இணையத்தில் வைரலாகும் புதிய அரசியல் இயக்கம்

 
ஈ ஜனதா பார்ட்டி

 

 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பாணியில், ‘மக்கி ஜனதா கட்சி’ எனப்படும் ‘ஈ ஜனதா கட்சி’ என்ற புதிய அரசியல் இயக்கம் இணையத்தில் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. ஈயின் எமோஜியைத் தனது அடையாளமாகக் கொண்டுள்ள இந்த இயக்கம், வித்தியாசமான பெயர் மற்றும் அணுகுமுறையால் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்

இந்த இயக்கம் இளைஞர்களால், இளைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. வழக்கமான அரசியல் கட்சிகளின் பாணியில் பெயரையும் அடையாளத்தையும் அமைத்துள்ள இந்தப் புதிய முயற்சி, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

வித்தியாசமான பெயர் மற்றும் ஈ எமோஜியை அடையாளமாகக் கொண்டிருப்பதால், இந்த இயக்கம் இணையத்தில் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இதன் நோக்கம், செயல்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும்போதுதான் அதன் செயல்பாடுகள் குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.