கோடையில் வளரும் ஈபிள் கோபுரம்... வெப்பத்தால் ஏற்படும் ஆச்சரியம்!
உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் 1887 முதல் 1889 வரை பிரெஞ்சு பொறியியலாளர் குஸ்டாவ் ஈஃபிலால் கட்டப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் அடையாளமாகத் திகழும் இந்த இரும்பு கோபுரம் கோடைக்காலத்தில் சற்று உயரமாகிறது என்பது பலரும் அறியாத ஆச்சரியமான உண்மையாகும். கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது இரும்பு விரிவடையும் என்ற இயற்பியல் தன்மையே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

வெப்பநிலை உயரும்போது கோபுரத்தில் உள்ள இரும்புத் தாதுக்கள் விரிவடைவதால் இதன் உயரம் சுமார் 10 முதல் 15 செ.மீ வரை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே குளிர்காலத்தில் வெப்பம் குறையும்போது மீண்டும் சுருங்கித் தனது இயல்பான உயரத்திற்குத் திரும்பி விடுகிறது. அறிவியலில் வெப்ப விரிவு என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறையை ஈபிள் கோபுரத்தில் நாம் நேரடியாகக் காண முடியும்.

வெப்ப மாற்றத்திற்கு ஏற்ப ஈபிள் கோபுரம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் இந்த வினோதத் தகவல் சுற்றுலாப் பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இவ்வளவு பெரிய கோபுரம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உயருவதும் தாழ்வதும் ஒரு சிறந்த இயற்பியல் உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. பாரிஸ் நகரின் அழகைக் காணச் செல்லும் மக்கள் இனி இந்தச் சிறு மாற்றத்தையும் கவனித்துப் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
