"நாளை முதல் அமலுக்கு வருகிறது... இனி வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை... 3 நாட்கள் விடுமுறை... புதன்கிழமை பொது விடுமுறை - இலங்கை அரசு அதிரடி உத்தரவு!

 
3 நாட்கள் விடுமுறை 3 நாட்கள் விடுமுறை

இலங்கையில், கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் விதமாக வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இலங்கை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை மார்ச் 18ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களுடன் சேர்த்து, வாரத்தில் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாகச் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்தைக் குறைத்து எரிபொருள் பயன்பாட்டை மிச்சப்படுத்துவது, அரசு அலுவலகங்கள் இயங்காததன் மூலம் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது, இறக்குமதிச் செலவுகளைக் குறைத்து அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது.

இந்த 4 நாள் வேலைத் திட்டம் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் ஆகிய துறைகளுக்குப் பொருந்தும். தனியார் நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்துத் துறைகளும் முடங்கிவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு கவனமாக உள்ளது.

இலங்கை

எனவே மருத்துவமனைகள் (சுகாதாரத் துறை), துறைமுகங்கள், நீர்வழங்கல் துறை, மின்சார வாரியம் மற்றும் சுங்கத்துறை போன்றவை வழக்கம் போல் இயங்கும். இவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று அறிவித்துள்ளது.