உடனடி அமல்... உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் அதிரடி மாற்றம் - புதிய ஐஜியாக அவினாஷ் குமார் நியமனம்!

 
தமிழ்நாடு தேர்தல் தமிழகம் தமிழ்நாடு தேர்தல் தமிழகம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது தமிழக உளவுத்துறையின் தலைமையும் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், "உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உள்ளிட்ட சில உயர் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குச் (திமுக) சாதகமாகச் செயல்படுகின்றனர்" எனத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தன.

இந்தப் புகார்களைப் பரிசீலித்த இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை அந்தப் பதவியிலிருந்து விடுவித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய உளவுத்துறை ஐஜியாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம்

இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் உளவுத்துறையின் பங்கு மிக முக்கியமானது என்பதால், நடுநிலையான தேர்தலை உறுதி செய்யவே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, உளவுத்துறை மட்டத்திலும் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.