நாமக்கல் மண்டலத்தில் 6 நாட்களில் முட்டை விலை 40 காசுகள் உயர்வு!

 
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கான கொள்முதல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கிடையே கவனம் பெற்றுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் அறிவிப்பின்படி, நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கான கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.60 ஆக விற்கப்படுகிறது.

முட்டை

பிற மாநிலங்கள் மற்றும் பிற மண்டலங்களில் முட்டையின் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருவதன் தாக்கம் நாமக்கல் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 6 நாட்களில் மட்டும் ஒரு முட்டையின் விலை ஒட்டுமொத்தமாக 40 காசுகள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.