எகிப்து கப்பல் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்... 6 பேர் பலி!

 
padaku

 

செங்கடலின் பாப் எல் மந்தேப் நீரிணை பகுதியில், ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி வழியாக வந்த எகிப்து நாட்டுக்கு சொந்தமான திகமா என்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். முதலில் சரக்கு கப்பலானது நீரிணையை கடந்து செல்லும் போது ஏவுகணைகளை வீசி ஹவுதி படையினர் இந்த கடுமையான தாக்குதலை அரங்கேற்றினர். இந்த கோர தாக்குதலின் போது கப்பலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதுடன், அங்கு கடுமையான சூழல் உருவாகியது.

தாக்குதலில் சேதமடைந்த கப்பலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த சமயத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஹவுதி படையினர் இரண்டாவது முறையாக மற்றொரு தாக்குதலை நடத்தினர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த இரண்டு முறை தாக்குதலில் நான்கு கப்பல் ஊழியர்கள் மற்றும் இரண்டு மீட்புப் படை பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Six killed in Houthi attack on Bab al-Mandeb ship, Yemen's government says - Yahoo News Canada

இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடல் வழிப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சரக்குக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.