வாழ்வில் ஏற்றம் பெறச்செய்யும் ஏகாதசி விரதமுறை, வழிபாடு , பலன்கள்!!

 
கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி உற்சவம்!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வருவது வழக்கம். வருடத்தின்  அனைத்து ஏகாதசிகளுமே சிறப்பு வாய்ந்தவை .ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி.ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் அனைவருமே பித்ருக்களின் ஆசியுடன் ஐஸ்வர்யமும் கிடைக்கப் பெறுவோம் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.தொடர்ந்து  இந்த விரதத்தை கடைப்பிடித்திட இந்திர லோகம் ஆளும் பேறு பெறுவோம் என்பது ஐதிகம் 

இன்று இந்திர ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

இத்தனை சிறப்புகளை உடைய  ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். வீடு சுத்தம் செய்து அருகிலுள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். கோவிலில் இருந்து வரும் போது சுவாமியை வீட்டிற்கு அழைத்து வருவதாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்து விஷ்ணுவின் படங்கள், சிலைகளுக்கு துளசி, பூக்கள் சாற்றி, விளக்கேற்ற வேண்டும்.


வீட்டிற்கு அருகில் இருக்கும் நெல்லி மரத்திற்கு தீப ஆராதனை காட்ட வேண்டும். தொடர்ந்து லட்சுமி மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். காலை முதல் மாலை வரை துளசி நீர் அருந்தி உபவாசம் இருக்கலாம் நாள் முழுவதும் விஷ்ணு புராணம், பெருமாள் ஸ்தோத்திரம் இவைகளை மனதில் துதித்த படியே வேலைகளை தொடரலாம்.நாள் முழுவதும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் மனதில் விஷ்ணுவை நினைத்து பால் , பழம் எடுத்துக் கொள்ளலாம். 

இன்று ஐஸ்வர்யங்களை அருளும் இந்திர ஏகாதசி!

மாலையில் மீண்டும் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்த பிறகு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த முறையில் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அவர்களின் பல தலைமுறை முன்னோர்கள் நற்கதி பெறுவார்கள். ஆசிகள் கிடைக்கப்பெறுவதுடன் செய்யும் செயல்களில் மகத்தான வெற்றி கிட்டும். ஐஸ்வர்யம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் பெறுவோம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web